நோக்கம்

 
அனைத்திந்திய இணைய தள மக்கள் கூட்டமைப்பு

உறுதிமொழி

இந்திய அரசியமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள
சமத்துவம்,
னநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றிற்கு
உண்மையாகவும், நம்பிக்கையாகவும், நாட்டின் இறையாண்மை,
ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை உறுதியாகக் கடைப்பிடிப்போமென
அனைத்திந்திய
 இணைய தள மக்கள் கூட்டமைப்பு  உறுதி அளிக்கிறது

குறிக்கோள்
  
                இந்திய மற்றும் தமிழகம்   மக்களின்  ஒருங்கிணைந்த நீடித்த தன்னிறைவு பெற்ற வளர்ச்சிக்கு பாடுபடுவதே  "அனைத்திந்திய இணைய தள மக்கள் கூட்டமைப்பின் குறிக்கோளாகும்.


நோக்கங்கள் 
  • அரசியல்,சமூகம்,பொருளாதாரம்,பண்பாடு உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை ஒருங்கிணைத்து தேசத்தின் வளர்ச்சி பாதையில் நடைபோட வைப்பது.
  • கல்வி, மருத்துவம், விவசாயம், கலை மற்றும் தொழில் துறைகளில்  உலகளாவிய தொழில் நுட்பத்தை இணைய தளம் மற்றும் நேரடியாகவும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லுதல்      
  • சாதி,மத,மொழி பேதமற்ற இளைய சமுதாயத்தை உருவாக்குதல்
  • பெண்களுக்கான எதிரான அனைத்து வகையான ஒடுக்குமுறைகளையும் ஒழித்து பாலின சமுத்துவத்தை உருவாக்குதல்    
  • தாய் மொழியாம் தமிழ்மொழியில்,பொறியியல்,மருத்தவம், கணினி உட்பட அனைத்து பாட பிரிவுகளும் பயில சர்வதேச தமிழ் இணைய குழு  உருவாக்குதல்.
  • நம் தமிழ் மொழியில் மென்பொருட்களை உருவாக்கி இளைய தமிழ் சமுதாயத்தை சர்வதேச அரங்கில் தலைநிமர செய்தல்
கல்வி,பொருளாதாரம் மற்றும் சமுக மேம்பாட்டு மையங்கள்
நோக்கம்:
 இந்திய மக்களின் ஒருங்கினைந்த தன்னிறைவு பெற்ற வளர்ச்சி பெற, குறிப்பாக இளைய சமுதாயத்தினர் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் பெற வேண்டும் என்ற சீரிய நோக்குடன் திட்டங்களை தீட்டி அதற்காக சிறந்த கல்வியாளர்கள் உள்ளடக்கிய கல்வி மேம்பாட்டு குழு,சிறந்த பொருளாதார வல்லநுர்களை கொண்ட பொருளாதாரம் மேம்பாட்டு குழு மற்றும் மனித வள மேம்பாட்டு துறை வல்லுநர்கள்,வழுக்குரைஞர்கள், சமுக சிந்தனையாளர்கள் உள்ளடைக்கிய  சமுக மேம்ப்பாட்டு குழு-க்களை மாவட்டம் தோறும் கல்வி,பொருளாதாரம் மற்றும் சமுக மேம்ப்பாட்டு மையங்களில் உருவாக்கி செயல்பட உள்ளோம்.

கல்வி மேம்பாடு

செயல்திட்டம்: 

        மாவட்டம் தோறும் கல்வி மேம்ப்பாட்டு மையங்களை உருவாக்குதல்
        8வது 10வது மற்றும் 12வது பயிலும் மாணவ மாணவிகளின் ஆர்வம் மற்றும் திறமைகளின் அடிபடையில் உயர்க்கல்விக்கான வழிக்காட்டுதல்.
        10வது மற்றும் 12வது,பட்டய மற்றும் பட்டபடிப்பில் தோல்வி அடைந்த அல்லது தொடர முடியாத மாணவ மாணவிகளின் மாற்று கல்வி மூலம் வேலைவாய்ப்புக்கு வழிக்காட்டுதல்.
        இளங்கலைப்பட்டம்,முதுநிலைப்பட்டம் பெற்றவர்கள் மேற்ப்படிப்பிற்க்கு மற்றும் ஆராய்ச்சி படிப்பிற்க்கான வழிக்காட்டுதல்.
        கல்வி,தொழில்,கலை மற்றும் விளையாட்டு துறை சம்பத்தப்பட்ட பயிற்சி வகுப்புகள் மற்றும் முகாம்கள் நடத்துதல்.

        மாநில,மத்திய அரசுகள்,அயல்நாடு மற்றும் தனியார் அளிக்கும் உபகார சம்பளம் மற்றும் ஊக்கதொகையை திறமையும்,தகுதியும் உள்ள மாணவர்கள் பெற வழிவகை செய்தல்.
        வங்கிகள் வழங்கும் கல்வி கடன் பெற திறமையும்,தகுதியும் உள்ள மாணவர்கள் பெற ஆவன செய்தல்.




பொருளாதார  மேம்பாடு

செயல்திட்டம்:

        மாவட்டம் தோறும் பொருளாதார மேம்ப்பாட்டு மையங்களை உருவாக்குதல்
        சுயதொழில் ஆர்வமுள்ள இளைஞர்கள்,இளம்பெண்களை மற்றும் திருநங்கைகளை மாவட்ட பொருளாதார மேம்ப்பாட்டு மையத்தில் ஒருங்கிணைத்தல்
        இளைஞர் சுய உதவி குழுக்களை உருவாக்குதல்
        மத்திய, மாநில அரசுகளின் தனி நபர் மற்றும் கூட்டு தொழில் கடனுதவி பெற தொழிற் தேர்வு,திட்ட அறிக்கை தயாரித்தல் என அனைத்து தளங்களிலும் வழிகாட்டுதல்
        பொருட்களை சர்வதேச தரத்தில் தயாரிக்க பயிற்சி முகாம்கள் நடத்துதல்
        உற்பத்தியான தரமான  பொருட்களை சந்தைப்படுத்த வழிக்காட்டல்
        ஏற்றுமதி செய்ய வழிக்காட்டுதல்
        பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு  போக்குவரத்து  தொழிலில் ஈடுப்பட முறையான பயிற்சி கொடுத்து கடனுதவி பெற வழிக்காட்டல்.
        மாற்று திறனாளிகளுக்கான தொழிற்ப்பயிற்சி,கடனுதவி,சந்தைப்படுத்தல் என வழிக்காட்டுதல்.
        இளைஞர்,மகளிர் மற்றும் திருநங்கைகள் வேலைவாய்ப்பிற்காக சிறுதொழில் மற்றும் குடிசைதொழிலில் தயாராகும் பொருட்களை மாவட்ட பொருளாதார மையங்கள் மூலம் கொள்முதல் செய்தல்



சமுக மேம்ப்பாடு

செயலத்திட்டம்:


          •        வேலைவாய்ப்பு முகாம்கள்
        சட்ட ஆலோசனை முகாம்கள்
        மனித வள மேம்பாட்டிற்க்கான பயிற்சி வகுப்புகள்
        முதியோர்,விதவை,மாற்று திறனாளி ஆகியோருக்கு சம்பத்தப்பட்ட துறைகளிலிருந்து சலுகைகள் பெற்று தர ஆவன் செய்தல்
        அடிபடை சுகதாரம் பற்றி விழிப்புணர்வு முகாம்கள்.
        எதிர்க்கால சமுதாயத்தினற்க்கு சுற்று சூழல் விழிப்புனர்வு முகாம்கள்
        சமுக காடு வளர்த்தல்
        இசை,ஓவியம்,நடனம் போன்ற கலை ஆர்வமுள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை உருவாக்குதல்
        விளையாட்டு துறையில் ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்தல்
        எழுத்து பணி ஆர்வமுள்ளவர்களை கண்டறிந்து அவர்களின் படைப்புகளை  வெளிக்கொணர்தல்.

என இன்னும் பல நலத்திட்டங்களுடன் இந்திய மற்றும் தமிழக மக்களின் ஒருங்கினைந்த நீடித்த தன்னிறைவு பெற்ற வளர்ச்சிக்கு பாடுபடுவதே அனைத்திந்திய இணைய தள கூட்டமைப்பின் குறிகோளாகும்.

No comments:

Post a Comment